வானில் மூன்று நாட்கள் காட்சியளிக்கும் ப்ளூ மூன்! மக்களுக்கு அரிய வாய்ப்பு

0
60

நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, அதேவேளை பவுர்ணமியாக நிலா தென்பட்டால் அதையே ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என அழைப்பார்கள்.பவுர்ணமியில் நிலவு வழக்கமாக தோன்றுவதை விடவும், கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.

இந்த மாத தொடக்கத்தில் நிலவு பூமியிலிருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

அது தொடர்ந்து பூமிக்கு பக்கத்திலேயே அதாவது, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை சுற்றி வரும் நிலையில் தற்போது பவுர்ணமி இன்றையதினம் முதல் மூன்று நாட்களுக்கு, ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்னும் நீல நிற முழு நிலா வானில் தெரியும் என்று ‘நாசா’ அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை (19-08-2024 to 21-08-2024) இந்த முழு நிலாவை பார்க்க முடியும்.வழக்கமான பவுர்ணமி நிலாவை காட்டிலும், 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் இருப்பதே சூப்பர் ப்ளூ மூன் எனப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here