மலையக அரசியலில் இ.தொ.காவை பற்றி குறிப்பிட்டாலோ அல்லது இ.தொ.காவை விமர்ச்சித்தால் மாத்திரமே எதிர்கால அரசியல் உண்டென மாற்றுகட்சியினர் தற்போது விமர்சனம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர். இதற்கு இ.தொ.காவோ, இ.தொ.காவின் உறுப்பினர்களோ ஒரு போதும் தளரப்போவதில்லையென இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்……
அன்று அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானில் ஆரம்பித்து அமரர் ஆறுமுகன் தொண்டமான், தற்போதூ ஜீவன் தொண்டமான் என அனைவரையும் காட்டி வெறுமனே விமர்சன அரசியலை மட்டுமே மாற்றுக்கட்சி சகாக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.காரணம் மலையகத்தில் நிலையானதும் ஸ்தீரமான அமைப்பு இ.தொ.காவே அதனால் இன்றும் மக்கள் இ.தொ.காவோடு இருக்கின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வீடுகள் கட்டப்பட்டதாக கொக்கரிப்பவர்கள் அவ்வீட்டுதிட்டம் என்னவாகியுள்ளது என சற்றும் சிந்தித்து பார்க்கவில்லை.வெறுமேனே நான்கு சுவர்களை வைத்து கூரை போட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடூக்காமல் வீடு என மக்களுக்கு கொடுத்துள்ளனர்.அவர்கள் கைவிட்ட குறைகளை இ.தொ.கா மாத்திரமே முன்னின்று தற்போது செய்து வருகின்றது.
அதுமட்டுமல்லாமல் தற்போது புதிய யுக்தியாக விமர்சனம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்து பொய்களை உண்மைபோல கூறி நாடகமாடி மக்களை திசைத்திருப்ப முயற்சிக்கின்றார்கள் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. மலையக மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் மக்களுக்கு பல நலசார்ந்த விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்.எனவே வாயால் வடைசுடுபவர்கள் இ.தொ.காவை விமர்சித்து அரசியல் தேட முற்பட்டுள்ளமை வேடிக்கையான விடயமென இ.தொ.கா உபத்தலைவர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.