வாழைப்பழம் சிக்கி வயோதிபர் மரணம்

0
54

வாழைப்பழம் தொண்டையில் சிக்கிதில் 74 வயதுடைய வயோதிபரான பியதாஸ, உயிரிழந்துள்ள சம்பவமொன்று பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அவர் உட்கொண்ட வாழைப்பழத்தில் ஒரு துண்டு, தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக, பலாங்கொடை பிரதான வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சத்தியா முன்னிலையில் இடம் பெற்ற பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

“தனது கணவன், உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டார். அதன்பின்னர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டார். அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில், அவசர, அவசரமாக அழைத்துவந்தோம் எனினும், உயிரிழந்துவிட்டார் என பிரதான சட்ட வைத்தியர் முன்னிலையில் பியதாஸவின் மனைவி சாட்சியமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here