கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, விசேட ரயில் சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெரஹெரவை பார்வையிட செல்பவர்களின் நன்மை கருதி குறித்த விசேட ரயில் சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று தொடக்கம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இன்று காலை 9.50க்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமான முதலாவது விசேட ரயில், பகல் 1.10 மணியளவில் கண்டியை சென்றடையும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல் பகல் 2.15 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் மற்றுமொரு விசேட ரயில் மாலை 5.27க்கு கண்டியை சென்றடையவுள்ளது.