விஜய் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்த அப்டேட்!

0
2

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

ஏனென்றால் இந்த திரைப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது.

அதற்குப்பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாகக் கூறப்படுகின்றது.

இதற்கமைய குறித்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு படத்தின் கிளிம்ப்ஸ் காணொளியான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் காணொளியைப் படக்குழு வெளியிட்டது.

இந்த காணொளி என் நெஞ்சில் குடியிருக்கும் என ரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளது. குறித்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here