விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண் வழங்கிய பேராசிரியர்கள்!

0
103

லக்னோவில் நடைபெற்ற பல்கலை கழக தேர்வில் விடைத்தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதிய நான்கு மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண் வழங்கிய இரண்டு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பகதூர் சிங் பூர்வாஞ்சல் என்ற பல்கலை கழகம் உள்ளது. இங்கு அண்மையில் நடைபெற்ற மருந்தியல் டிப்ளமோ படிப்புக்கான தேர்வை மாணவர்கள் எழுதினர். இதில் 4 மாணவர்கள் விடைத்தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் என எழுதியுள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள இரண்டு பேராசிரியர்கள் 50 சதவீத மதிப்பெண்ணும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பல்கலை கழக முன்னாள் மாணவர் திவ்யன்சு சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களின் விடைத்தாளை குறித்து கேட்டிருந்தார். அப்போது வந்த பதிலில் தான் இந்த சம்பவம் நடந்தது உண்மை என அம்பலமாகி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பல்கலை கழக வேந்தரும், மாநில கவர்னருமான ஆனந்தி பென் பட்டேலுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்கள் வழங்கிய இரண்டு பேராசிரியர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here