யாழ்.புங்குடுதீவில் கடந்த 2015 மே 13ஆம் திகதி கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட “வித்தியா“ படுகொலை வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும் சற்று முன்னர் 30 வருட கடூழிய சிறைதண்டனையும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.