அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளின் ஒரு பகுதியாக, வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ளார்.
ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லண்டனை சென்றடைந்தார்.
இதேவேளை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ட்ரம்ப் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதன்போது அமெரிக்கா- பிரித்தானியா இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிரித்தானிய – அமெரிக்க உறவு உலகிலேயே மிகவும் வலிமையானது என ஸ்டார்மரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.