விமர்சனங்களால் நான் வளர்வேனே தவிர என்னை எவரும் வீழ்த்த முடியாது

0
142

மலையகத்தில் இன்று பலர் பல்வேறு அர்த்தமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார்கள். அவற்றிக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது நியாயமான விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம் ஆனால் ஏதோ பேச வேண்டும்; என்புதற்காக செய்யப்படும் விமர்சனங்களுக்கு என்னால் பதிலளித்துக்கொண்டு இருக்க முடியாது கடந்த காலங்களில் சுகாதார துறை தோட்டக்கட்டுப்பாட்டுக்குள ;தான் இருந்தன அவற்றினை நாங்கள் பொறுப்பேற்ற பின் 550 நிறுவனங்களை பொறுப்பேற்றிருக்கிறோம், முதற் கட்டமாக 59 நிறுவனங்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. இத்தனை வருடங்களாக சிலர் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை ஆனால் நாங்கள் முடித்து காண்பித்துள்ளோம்.

அதே நேரம் இன்று பலர் தரமற்ற விமர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் நான் வளர்வேனே தவிர ஒரு போதும் எவரும் என்னை வீழத்த முடியாது என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் குறுக்கு வீதி சுமார் 295 லட்சம் ரூபா செலவில் மத்திய மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டில் காபட் இட்டு புனரமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (27) நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் எனக்கு தெரிய நான்கு தடைவைகள் இந்த வீதிகளை அபிவிருத்தி செய்ய அடிக்கல் நாட்டினார்கள் ஆனால் வீதிகள் வரவில்லை நாங்கள் அடிக்கல் நாட்டவில்லை ஆனால் வீதிகள் வந்துள்ளன தற்போது கொவிட் தாக்கம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள் தற்போது கொள்ளை ரீதியான அரசியல் முன்னெடுப்புக்கள் பொருத்தமற்றது அவர்கள் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால் அபிவிருத்தி ரீதியான அரசியலினை முன்னெடுக்க வேண்டும் எனவே நாங்கள் அதனை செய்து வருகிறோம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடம் 350 கிலோ மீற்றர் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன அது மாத்திரமின்றி எனது அமைச்சினூடாக மாத்திரம் அபிவிருத்திக்காக 772 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிருந்து போடைஸ் வரை பார்த்தால் கூட வீதி அபிவிருத்தி நடந்து கொண்டு தான் இருக்கின்றது இன்று அபிவிருத்தி பணிகள் விலையேற்றம் காரணமாக கால தாமதம் ஆகியிருக்கலாம் ஆனால் இன்று சில வாரங்களில் அப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

இதே நேரம் ஆரம்பத்தில் ஒரு கூட்டம் கூறியது எமது மக்களுக்கு கோதுமை மா தேவையில்லை என்று அப்புறம் கோதுமை மாவினை வைத்து அரசியல் செய்கின்றோம் என்றார்கள் அதனை தொடர்ந்து விலையினை குறைத்து கொடுத்தவுடன் அது தாமதம் என்றார்கள் ஆகவே தரமற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை.

30 வருட போரினை கடந்து நாம் திரும்பி மீண்டு வந்துள்ளோம் ஆகவே இந்த கொரோனா பாதிப்பில் இருந்தும் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறான தொற்றுக்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் நுவரெலியாவினை பொருத்த வரையில் மக்கள் பொறுயாகத்தான் இருந்தார்கள் அதற்கு நான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆகவே ஏனைய மாவட்டங்களை போன்று வீதி அபிவிருத்திகள் நடந்தால் நாளை பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் கடந்த காலங்களில் இந்த வீதியில் மக்கள் செல்ல முடியாத நிலையே காணப்பட்டன எத்தனையோ கர்பினித்தாய்மார்கள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள் ஆகவே தான் இந்த வீதியினை அபிவிருத்தி செய்துள்ளோம் எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு அபிவிருத்திகள் கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .ரமேஸ்வரன்,முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்.பி.சத்திவேல் அக்கரபத்தனை பிரதேச சபைத்தலைவர் கதிர்ச்செல்வன்,கொட்டகலை பிரதேச சபைத்தலைவர்,ராஜமணி பிரசாத்,தலவாக்கலை லிந்துலை நகரசபைத்தலைவர் லெ.பாரதிதாசன்,பிரதேசபை உறுப்பினர்கள்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் உதவி செயலாளர் எஸ் சச்சிதாநந்தன் உள்ளிட்ட இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here