தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன் (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களை சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன்படுத்தும் குடி நீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது
இதில் பறவைகள், விலங்குகள் மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்க்கு உகந்ததாக இல்லை.
இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிகள உத்தியோகஸ்தரிடம் மற்றும் தோட்ட முகாமையாளரிடம் அறிவித்த போது, குறித்த நீரை பயன்படுத்தும் மக்கள் எமது தோட்டத்தில் தொழில் செய்யாதபடியால் சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான பதிலை கூறியுள்ளனர், என இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நிருபர்-