விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும் – அரசாங்கம்!

0
6

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாத இறுதியிலும் அடுத்த மாதத்துக்கான எரிபொருள் விலை சூத்திரத்துக்கமைய கணிப்பிடப்படும். ஜூலை மாத எரிபொருள் விலைக்காக ஜூன் 30ஆம் திகதி கணிப்பீடு இடம்பெற்றது. ஜூன் மாதத்தில் காணப்படும் எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே ஜூலை மாதத்துக்கான விலையும் தீர்மானிக்கப்படும். மாறாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதத்துக்கான விலை தீர்மானிக்கப்படுவதில்லை.

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஜூனில் சராசரி விலை அதிகரித்தமையால் ஜூலையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் சராசரி விலை குறையும் பட்சத்தில், ஆகஸ்ட்டில் விலை குறைவடையும். கடந்த காலங்களில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருக்காவிட்டால் தற்போது மக்களுக்கு எரிபொருள் விலைகளில் நிவாரணங்கள் வழங்கியிருக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here