விளம்பரம் செய்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் இ.தொ.கா.விற்கு கிடையாது- மாகாணஅமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு!!

0
168

விளம்பரம் செய்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் இ.தொ.கா.விற்கு கிடையது மாகாணஅமைச்சர் எம்.ரமேஸ்வரன் கூறுகிறார்.மலையகத்தில் விளம்பரம் செய்துதான் அரசியல் செய்யவேண்டிய நோக்கம் இலங்கை தொழிலாளர் காங்ரஸிற்கு கிடையாது என மத்திய மாகாண மாகாண இந்து காலாச்சார தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

13.05.2018. ஞாயிற்றுகிழமை மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தோட்டபுறங்களில் உள்ள ஆலயங்களுக்கு சிலைகளை வழங்கிவைத்து மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே இத்தனை கூறினார். இதன் போது மாகாண அமைச்சர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதிகனகராஜ், பிலிப்குமார் மற்றும் பலரும் கலந்த கொண்டனர் .

இதன் போது மேலும் உறையாற்றிய அமைச்சர் எம்.ராமேஸ்வரன் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் எதற்க்காக  இந்த ஸ்தாபனத்த்தை ஆரம்பித்தார் என்ற நோக்கம் அனைவருக்கம் தெரியும்.

ஆனால் சிலர் கூறுகிறார்கள் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தோட்ட தொழிலாளர்கலை அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று மறைந்த இ.தொ.கா.வின் தலைவர் சௌமியமுரத்தி தொண்டமான் மலையகத்தில் முதன் முதலில் பாடசாலைகலை அமைத்தார் எதற்க்காக மற்றய சமுகம் போல் எமது சமுகமும் கல்வியில் வளர்ச்சியடை வேண்டும் என்பதற்க்காக தான் முதன் முதலில் மலையகபகுதிகளுக்கு பாடசாலைகளை அமைத்து கொடுத்தார்.

இன்று தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகலை எடுத்து கொண்டால் அனைத்து துறைகளிலும் பிரகாசிக்கின்றார்கள் கிராமபுறத்தில் வாழுகின்ற மக்களை விட நிகராக வாழ்ந்த வருகின்றோம் அதற்க்கு யார் காரணம் இலங்கை தொழிலாளர் காங்ரசும் ஆறுமுகன் தொண்டமானும் என் கூறினார்.

கடந்த காலங்களில் ஆறுமகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலபகுதியில் யாரையும் கூரைகுறவில்லை அமைச்சராக இருந்த சந்திரசேகரனும் ஆறுமுகன் தொண்டமானும் இவ்வாறு யாரையும் கூறை கூறி கொண்டு இருக்கவில்லை மக்களுக்கான சிறந்த சேவைகலை செய்யதனர்

இந்த நாடு என்பது ஒரு பெருபான்மையான நாடு தோட்ட புறங்களில் நுற்றுக்கு 99வீதமான மக்களுக்கு மின்சார வசதிகலை பெற்று கொடுத்து மலையகத்திற்கான பல பாடசாலைகலையும் பெற்று கொடுத்தவர் ஆறுமுகன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காஙரஸ் நடந்த தேர்தலின் போது என்றும் நாங்கள் உங்களுடன் என்ற வாசகத்தை பயன்படுத்தியிரந்தது இம்முறை தொழிலாளர் தினத்தின் போது தில்லு இருந்தா மோதிபாரு என்ற வாசகத்தை பயன்படுத்தி இருந்தது தில்லு இருந்தா மோதி பாரு என்பது அரசியல் ரீதியாக எங்களோடு மோதிபாருங்கள் என்றுதான கூறியிருந்தோம் ஆனால் இதை சிலர் வேலை இல்லாதவர்கள் இதற்கு மாறி, மாறி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

02

இ.தொ.கா. என்றுமே மற்றவர்களை பற்றி விமர்சிக்காது  தொண்டமான் அவர்கள் அமைச்சராக இருந்த காலபகுதியிலும் கூட பல்வேறு வேலைதிட்டங்களை மாத்திரம் முன்னெடுத்து இருந்தார் .ஆறுமுகன் தொண்டமானுக்கு நாளைக்கு வேண்டுமானாலும் அமைச்சி பதவி வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆனால் அமைச்சி பதவியினை பொறுபேற்க அவருக்கு விருப்பம் இல்லை மக்கள் ஐந்து வருடத்திற்கு புதிய அமைச்சர்களை தேர்ந்தெடுத்துள்ளிர்கள் பொறுத்து இருந்து பார்ப்போம் மக்களுக்கான அதிகூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போவது யார் என்பதை .

இ.தொ.கா. என்பது கட்சி பேதங்கள் இன்றி மக்களுக்கு சேவை செய்யும் ஸ்தாபனம் மென்றும் அவர் குறிப்பிடார்.

(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here