வீட்டில் பெட்ரோலை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

0
208

பெட்ரோலை கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கயான் ஏகநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டி ஏற்பட்டுள்ளதால், வாகனங்களுக்கான எரிபொருளை பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

இந்த செயற்பாட்டின் காரணமாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலை கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் கலாநிதி கயான் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here