மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளொன்று ஓட்டுநர் செலுத்திக்கொண்டு இருந்தபோதே திடீரென தீப்பிடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, எனினும் ஓட்டுநர் உடனடியாக மோட்டார்சைக்கிளை கைவிட்டு தப்பியுள்ளார், தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் பொது மக்களின் துணையோடு தீ அணைக்கப்பட்டது.