லிந்துல மெராயா பிரதேசத்தின் தங்ககலை,எல்ஜீன் போன்ற தோட்டங்களுகான செல்லும் குறுகிய பாதை ஒன்றை அகலப்படுத்துவதற்கான வேலைதிட்டத்தினை இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் அவர்களின் நிதி ஒதீக்கீட்டின் மூலம் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் கணேஸ் அவர்களின் மூலம் இடம்பெற்று வருகின்றது.
மெராயா நுவரெலியா வீதியை இலகுவாக அடையக்கூடிய வகையிலான சிறு நடை பாதையாக காணப்பட்டது.இவ்வீதி ஊடாக வாகனங்கள் செல்லமுடியாது நீண்ட சுற்று பாதை ஊடாகவே இத்தோட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டும்.எனவே இப்பாதையை அகலப்படுத்துவதனூடாக இலகுவாகழும் விரைவாகவும் இத்தோட்டங்களுக்கு செல்ல முடியும் என்பதால் இப்பாதை அகலப்படுத்தப்பட்டு விரைவில் கொங்ரீட் இடப்படும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவித்தார்.
குலசேகர் லீபன்