வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை!

0
1

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

“நிறுவன பராமரிப்பு அல்லது பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபா உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த 5,000 ரூபா கொடுப்பனவு நாடு முழுவதும் உள்ள 306 குழந்தை அபிவிருத்தி நிலையங்களில் வசிக்கும் 9,191 குழந்தைகளுக்கு பயனளிக்கும்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளில் 3,000 ரூபா குழந்தைகளை பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களின் பராமரிப்பிற்காக வழங்கப்படும். 2,000 ரூபா ‘அர்த’ என்ற குழந்தையின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகும் போது எதிர்கால நடவடிக்கைகளுக்காக இந்த 2,000 ரூபா பணம் அவர்களுக்கு பயனளிக்கும். இந்த திட்டத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 1,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி சம்பந்தப்பட்ட கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் வகையில் இதை அமைத்துள்ளோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here