வெற்றியை சகோதரிக்கு அர்ப்பணித்த ஆகாஷ் தீப்!

0
77

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குறித்த வெற்றிக்கு இந்திய அணியின் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.

இவர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியின் போக்கை மாற்றியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த போட்டி நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஆகாஷ் தீப் பின்வருமாறு குறிப்பிட்டார்.

”எனது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்.” என ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here