வெளி மாகாணங்களில் உள்ள மாணவர்களை அட்டன் கல்விவலய பாடசாலைகளுக்கு அனுமதிவழங்கமுடியாது- பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

0
177

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள மாணவர்களை அட்டன் கல்விவலய பாடசாலைகளில் அனுமதிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது.அட்டன் வலகல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் வழியுருத்தல்

வெளிமாவட்டங்களில் உள்ள மாணவர்களயோஅல்லது வெளிமாகாணங்களில் உள்ள மாணவர்களையோ அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அனுமதி வழங்குவதை அட்டன கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற அதிபர்கள் தவிர்த்து கொள்ளவேண்டுமெனவும் இதற்கான அனுமதியினை அட்டன் வலயகல்வி பணிப்பாளர் என்ற ரீதியில் என்னால் ஒரு காலமும் வழங்க முடியாதுயென அட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

23.05.2018.புதன் கிழமை பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்திற்கான விஞ்ஞான பிரிவினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வலயகல்வி பணிப்பாளர் உட்பட கோட்டகல்வி பணிப்பாளர் செந்துரவேல் உதவிகல்வி பணிப்பாளர் எம்.ஜே.செல்வராஜா சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பெரியசாமி சந்திரசேகரன் உதவி அதிபர் ராதா மற்றும் கல்லூரியின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வலயகல்வி பணிப்பாளர் குறித்த கல்லூரியில் முன்பு விஞ்ஞான பிரிவு இருந்தது அதன்பிறகு அது கைவிடபட்டபிறகு அதிபர் வேலுசாமி தலைமையில் மீண்டும் அதனை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

அட்டன் கல்வி வலயம் என்பது இலங்கையில் மாணவர்களின் பெறுபேருகளின் அடிப்படையில் மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது இந்த பெறுமை அட்டன் கல்வி வலயத்தின் கீழ் பணிபுகின்ற அதிபர் ஆசிரியர்களின் சிறந்த சேவையின் ஊடாகவே இந்த பெறுமை எமக்கு கிடைத்திருக்கிறது. அட்டன் கல்வி வலயத்தினை எடுத்து கொண்டால் கல்விசார்ந்த சமூகம் சார்ந்த வலயமாக காணபடுகிறது. இதில் பொகவந்தலாவ அட்டன் மஸ்கெலியா போன்ற பகுதிகளை சார்ந்த மாணவர்களுக்கு சொந்தமான ஒரு வலயம் எனவும் தெரிவித்தார்

வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை அட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அனுமதி வழங்கவதனால் எமது பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய எதிர்பார்புகள் வீனடிக்கபடுவதாகவும் தெரிவித்தார். 2017ம் ஆண்டிற்கான க.பொ.த.சா.தர பெறுபேருகளை எடுத்து நோக்கினால் இம் முறை அனைத்து பாடசாலைகளும் சிறந்த பெறுபேருகளை பெற்று எமது சமூகத்திற்கும் பாடசாலைகளுக்கும் அட்டன் வலயக்கல்வி பணிமனைக்கும் பெறுமையினை தேடி தந்திருக்கிறார்கள்.

எனவே இம் முறை மீண்டும் ஆரம்பித்து இருக்கின்ற விஞ்ஞான பிரிவிற்கான மேலதிக உபகரணங்களை பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரிக்கு பெற்று தருவதாக உறுதியளித்தார்.

 

(பொகவந்தலாவ நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here