அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் வெளிஒயா இல.02 தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு ஆசிரியர்கள் அட்டன் விஷேட குற்றதடுப்பு பொலிஸாரினரால் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் விஷேட குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது சம்பவமானது 09.01.2019.புதன் கிழமை இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது
அட்டன் வெளிஒயா தமிழ் வித்தியாலயத்தின் அதிபரினால் அட்டன் விஷேடகுற்ற
தடுப்பு பிரிவில் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய நேற்றைய தினம்
ஒருவரும் இன்றைய தினம் ஒருவரும் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அட்டன் வெளிஒயா இல.02 தமிழ்
வித்தியாலயத்தின் பணிபுரிந்து வந்த இரண்டு ஆசிரியர்களும் நீண்டகாலமாக
வங்கி கடன் ஒன்றை பெறுவதற்காக குறித்த வித்தியாலயத்தின் அதிபரின்
முத்திரையை பதிவு செய்யுமாறு கோரிவந்த போதும் இவர்கள் கடன் பெரும்
படிவத்தில் அதிபர் தமது முத்திறையை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்து
வந்ததமையினாலே இந்த இரண்டு ஆசிரியர்களும் அதிபருடைய முத்திரையை தயாரித்து கடன் பெரும் படிவத்தில் பதிவு செய்ததாக அட்டன் விஷேட குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைளில் இருந்து தெரியவந்துள்ளது
கைது செய்யபட்ட இரண்டு ஆசிரியர்களின் மீதும் அட்டன் விஷேட குற்றதடுப்பு
பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதோடு கைது செய்யபட்ட இரண்டு சந்தேக
நபர்களும் 10.01.2019.வியாழகிழமை அட்டன் நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தபட உள்ளதாக அட்டன் விஷேடகுற்ற தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் விஷேட குற்றதடுப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)