இந்தோனேசியாவில் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களின் பிள்ளைகள் 19 வயதில் திருமணம் செய்து கொள்ள முடியும்.இந்தோனேசியாவில் 16 வயது சிறுவனுக்கும், 41 வயது பெண்ணிற்கும் காதல் திருமணம் நடந்துள்ளது.
மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த 41 வயதான மரியானா என்ற பெண், 16 வயதுடைய கெவின் என்ற சிறுவனுடன் சிறு வயது முதல் பழகி வந்துள்ளார். கெவின் தாயார் லிசாவும், மரியானாவும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் கெவின் மீது மரியானாவுக்கு காதல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மிக அண்மையில் மரியானாவுக்கும், கெவினுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
மரியானாவின் சொத்துக்காக தான் கெவினை அவருக்கு லிசா திருமணம் செய்து வைத்தார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.கெவின் சம்மதத்துடன் தான் திருமணம் நடைபெற்றதாகவும் லிசா கூறியிருக்கிறார்.
இது குறித்து மேற்கு கலிமந்தனில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர்.அதன்படி சிறுவனுக்கு 19 வயதாகும் வரையில் கணவன், மனைவி தனித்தனியாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்தோனேசியாவில் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களின் பிள்ளைகள் 19 வயதில் திருமணம் செய்து கொள்ள முடியும்.அதே போல பெற்றோர் அனுமதியின்றி 21 வயதில் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.