ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் (Uganda) உடல் நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வித மர்ம நோய் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘டிங்கா டிங்கா’ (Dinga Dinga) virus என பெயரிடப்பட்டுள்ள அந்நோய்க் கிருமியால் பாதிக்கப்படுபவர்கள், தொடர்ந்து நடுங்கி கொண்டேயிருக்கின்றனர்.
இது பெரும்பாலும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவதாகக் கூறப்படுகிறது.அங்குள்ள ஒரு மாவட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இந்த ‘டிங்கா டிங்கா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகப்படியான உடல் நடுக்கம் மற்றும் காய்ச்சல் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. சிலருக்கு எழுந்து நடப்பதே கூட சிரமமாக உள்ளது.மர்ம நோய் என்பதால், தற்போதைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆன்டிபயோடிக் (antibiotics) கொடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.
எனினும் நோய் கண்டவர்கள் ஒரே வாரத்தில் குணமடைந்து விடுகின்றனர். இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள், ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.