வெஸ்ட்வாடோ தோட்ட மக்கள் ஹிஸானியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரி போராட்டம்

0
195

டயகம சிறுமி ஜூட்குமார் ஹிஸானியின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க கோரியும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட கோரியும் மலையகத்தில் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் காணப்படுவதாக பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளதையடுத்து சிறுமியின் உடலத்தை மீள் பரிசோதனைக்கு அனுப்புவதற்கு இன்று (30) காலை புதைக்குழி தோண்டப்படுகிறது.

இவ்வாறான நிலையில், சிறுமி ஹிசாலிணியின் பிரேத பரிசோதணை சட்டரீதியாகவும் முறையாகவும் இடம்பெற்று அவரின் உயிரிழப்புக்கு சரியான நீதி கிட்ட வேண்டும், மலையத்தின் எதிர்கால சிறுவர்களின் உயிர் மற்றும் உரிமை பாதுகாப்புக்கு சிறுமி ஹிசாலினியின் மரணம் ஒரு ஒளியை வழங்க வேண்டும், சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்,அவரின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, இன்று (30) காலை நுவரெலியா மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில், நுவரெலியா – வெஸ்ட்வாடோ தோட்ட மக்கள், இன்று (30) காலை ஒருமணி நேரம் தமது போராட்டத்தை முன்னெடுத்து பின் பணிக்கு திரும்பினர்.

அதேபோல் கந்தப்பளை, போட்ஸ்வூட் தோட்ட மக்கள் தோட்ட பொது இடத்தில் ஒன்றுகூடி நீதி கோரிய போராட்டத்தை காலை முன்னெடுத்ததுடன், சிறுமி ஹிசாலினியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையிலும் ஈடுப்பட்டனர்.

 

டி,சந்ரு

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here