வேதன உயர்வு விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும்

0
183

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் நேரடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஆசிரியர் அதிபர் வேதன பிரச்சினை, சேதன பசளை பிரச்சினை, மீனவ பிரச்சினை போன்றவற்றிற்கு அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்கிறது

அதேபோன்று அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலமே பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் வறுமையை ஒழிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here