வேனில் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் கைது

0
219

அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேகநபர்கள் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் கழிவு தேயிலை தூளை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேக நபர்களை வட்டவளை பொலிஸார் (09) அதிகாலை கைதுசெய்ததுடன் சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் தலா இரண்டு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 52 பைகளில் 800 கிலோ கழிவு தேயிலை தூளை அக்கரபத்தனையிலிருந்து கம்பளை வெலம்பொட பகுதிக்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் வேனில் ஏற்றிச் சென்ற போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸார் வட்டவளையில் வைத்து (09) அதிகாலை வேனை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது குறித்த வேனை சோதனைக்குட்படுத்திய போது, அனுமதிப்பத்திரம் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கம்பளை வெலம்பொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், சந்தேக நபர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here