வைத்தியசாலை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

0
147

சம்பள பிரச்சனையை முன்வைத்து அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் இன்று (01) காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் என, சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 4 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி அலுவலகம் இன்றைய தினம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் காரணமாக பணி புறக்கணிப்பை 5 வைத்தியசாலைகளுக்கு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அநுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்று காலை 6.30 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here