வைத்தியசாலைக்கு சென்ற இளம் தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்!

0
157

கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் வாகன விபத்தொன்றில் இளம் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் (21.07.2023) நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு அந்த தம்பதியினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது.இந்த கோர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 27 வயதுடைய கணவனும், 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

34 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here