வைத்தியசாலைக்கு சென்ற கர்ப்பிணி பெண் மரணம் – மருத்துவரும் தாதியும் கைது

0
80

கொழும்பு, தெமட்டகொட பகுதியிலுள்ள வீடொன்றில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் தாதி ஒருவரும் நேற்று தெமட்டகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் மகப்பேறு வைத்தியர் ஒருவரும் மருத்துவ நிலையத்தின் தாதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலியந்தலை பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது வயிற்றில் உள்ள குழந்தையின் சிறுநீரக செயலிழப்பு தொடர்பில் இந்த வைத்தியரை சந்தித்துள்ளார்

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாது, எனவே அறுவை சிகிச்சை மூலம் தாயின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தால் அதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு இணங்கிய பெண், தனது கணவருடன் நேற்று தெமட்டகொடயில் உள்ள வைத்தியரின் கிளினிக்கிற்கு வந்துள்ளார்.அங்கு கருக்கலைப்பு செய்த பின்னர் சுகவீனமடைந்த பெண் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு உயிரிழந்துள்ளார்

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் கணவர் பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, வைத்தியரையும் தாதியையும் கைது செய்த தெமட்டகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here