‘ஆக்சன் கிங்’ அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா நடித்துள்ள ‘கேடி – தி டெவில்’ படத்திலிருந்து ’காளைங்கபோல் அண்ணன்மாரோ’ பாடல் வெளியாகி உள்ளது.
தொடக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த துருவா சர்ஜா, அதிரடி ஆக்சன் வேடங்களில் திறமையைக் காட்டினார். இப்போது கன்னட ரசிகர்கள் இவரை ‘ஆக்சன் பிரின்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படம் ‘கேடி – தி டெவில்’.




