ஸ்கை டைவிங் செய்த 104 வயது மூதாட்டி மரணம்!

0
222

13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்த டோரதி ஹொப்னர் (Dorothy Hoffner) என்ற 104 வயதான மூதாட்டி மரணமடைந்துள்ளார்.

குறித்த மூதாட்டி கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக அமெரிக்காவின் இல்லினாய்சில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருந்தார்.

அத்துடன்” பயம் இல்லாதவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடலாம் என்றும்” டோரதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் படைத்த சாதனைக்கான சான்றுகள் அவருக்கு வழங்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டார் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here