ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான விமானம் தீப்பிடித்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (05) அதிகாலை 12:30 மணியளவில் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் நடந்தது.
குறித்த விமானம் ஸ்பெயினில் இருந்து மான்செஸ்டர் விமான நிலையத்திற்கு பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 18 பேரில் 06 பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலைய தீயணைப்பு படை மற்றும் சிவில் அதிகாரிகளின் உதவியுடன் விமானத்தில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.