ஸ்மார்ட் ஆகிறது UNP – நாளை மறுதினம் திட்டம் ஆரம்பம்!

0
51

ஐக்கிய தேசிய கட்சி தனது வலுவை டிஜிட்டல் முறைமைகளுடன் இணைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கான வேலைத்திட்டத்தை நாளை மறுதினம் (04) முதல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பித்து வைக்கவுள்ளது.

இதன்போது அனைத்து தொகுதிகளுக்கமான டிஜிட்டல் ஒருங்கிணைப்பாளர்கள் (Digital Ward Coordinators) தெரிவு நிகழ்வும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

அதன்படி 1000 ஒருங்கிணைப்பு அதிகாரிகளை இணைத்துக்கொண்டு அவர்களூடாக கட்சியின் கட்டமைப்பு பணிகளை துரிதமாக முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு UNP App (செயலி) ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதோடு, இதனூடாக அங்கத்தவர்களை பதிவு செய்யயும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு பொதுமக்களுக்கான கட்சியின் தகவல்களும் இதன் ஊடாகவே பகிரப்படவுள்ளது.

மேலும் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் Starlink அதிவேக இணைய வசதியும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here