கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெரா விழாவின் இறுதி கும்பல் பெரஹெரா இன்று (03) வீதி உலா செல்கிறது.
நான்காவது கும்பல் பெரஹெரா நேற்று (02) இரவு வீதி உலா சென்றது.
கோட்டேராஜா, புலதிசிராஜா பரிவாரங்கள், இந்திராஜா மற்றும் மங்கள ஹஸ்தியா என அழைக்கப்படுவோர் ஊர்வலத்தில் கலசத்தை சுமந்து சென்றனர்.
இதேநேரம் முதல் ரந்தோலி பெரஹெரா நாளை (04) தொடங்க உள்ளது.
இறுதி பிரமாண்ட ஊர்வலம் ஆகஸ்ட் 08 ஆம் திகதி நடைபெற உள்ளதோடு , மேலும் கண்டி எசல பெரஹெரா கொண்டாட்டம் ஆகஸ்ட் 09 ஆம் திங்க்தி பிற்பகல் ஊர்வலத்திற்குப் பிறகு நிறுவடையவுள்ளது.