நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கந்தப்பளை கல்பாலம ஸ்ரீ விசுந்தாராமய விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை இடம்பெற்றது.இதன்போது நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் பிரதம அதிதியாகவும் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் கலந்து கொண்டு மதகுருமார்களின் ஆசிகளை பெற்றனர்.
இதன்போது நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் வேண்டுகோளுக்கிணங்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக ரூபா 800,000 நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்விகாரைக்கான மதில் சுவர் அமைக்கப்பட்டது.
இன்றைய தினம் விகாரையில் நடைபெற்ற பூஜைகளின் போது மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல புத்த பெருமான் அருள் கிட்ட வேண்டும் எனவும் தந்தையின் வழியில் இவ்விகாரைக்கு அனைத்து வகையிலும் தனது பூரண உதவிகளை வழங்கும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிற்கும் செயற்படுத்தும் தவிசாளர் வேலு யோகராஜ்க்கும் விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
நீலமேகம் பிரசாந்த்