போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்தை 7ஆம் திகதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தனக்கு பிணை கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த பிணை மனு மீது இன்று (03) மாலை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு பிணை அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு பிணை அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணா மனுவில் கூறியிருந்தார். இருவரும் தாக்கல் செய்த பிணை மனு மீதும் இன்று மாலை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
இருவருக்கும் பிணை அளிக்க பொலிஸ் தரப்பு எதிர்த்து தெரிவித்து இருந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில்தான் இன்று மாலை தீர்ப்பினை அளிக்க உள்ளது.