ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பெயரையும் அதன் உருவபடத்தையும் பயன்படுத்துவதற்கு இ.தொ.கா.பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டுள்ளது என்கிறார்
ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பெயரையும் உறுவபடத்தையும் பயன்படுத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காஙரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமகன் தொண்டமானுக்கு மாத்திரம் அனுமதி வழங்கபட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்
29.01.2018.திங்கள் கிழமை அட்டனில் ஊடகவியலாளர்களை தெழிவுபடுத்தும் போதே இதனை அவர் குறிப்பிட்டார் இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில் ஒவ்வொரு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை சார்நதவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இம் முறை இடம்பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் சேவல் சின்னத்திற்கு வாக்களித்து எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கரத்தை மேலும் பலபடுத்துவதோடு வெகுவிரைவில் மலையகத்தின் தலைவனாக ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அமைச்சு பதவிகளை மீண்டும் பெற்று எமது தோட்ட தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க சேவல் சின்னத்திற்கு எமது மக்கள் வாக்களிக்கவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார் .
2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமை பொறுப்பேற்று தற்பொழுது நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன.
மலையக பகுதிகளில் பொறுத்த மற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி சில பகுதிகளில் கை சின்னத்திலும் வெற்றிலை மற்றும் சேவல் சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்ரசுடன் இனைந்து போட்டியிடுகின்றனர் கை வெற்றிலை சேவல் ஆகிய மூன்று சின்னங்களுக்கும் பிரதானியாக நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் விளங்குகிறார்.
ஆனால் மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தன் மக்களுடைய வாக்குகளால்தான் ஜனாதிபதி தெரிவுசெய்யபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் எங்களோடுதான் இருக்கிறார்யெனவும் அனைத்து அதிகாரங்களும் எங்களுக்கு மட்டும் தான் உண்டு என எமது மலையக மக்களிடம் பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ நிருபர்: எஸ்.சதீஸ்