ஹங்கம இரட்டைக்கொலை – இன்று வெளியான பரபரப்புத் தகவல்கள்!

0
83

ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து என்பவரும் பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here