பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலத்துறை வீரரான வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உபாதைக் காரணமாக அவர் குறித்த போட்டியில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.