ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொண்டது. பிரதி தவிசாளர் பதவி, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்குச் செல்கிறது.
ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் ஆரம்பக் கூட்டம், வியாழக்கிழமை (26) பிற்பகல் 3 மணிக்கு உள்ளூராட்சி ஆணையர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தப்பத்து தலைமையில் ஹட்டன்- டிக்கோயா நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிக்காக திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் கீழ் சபைக்குத் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேந்திர ஆராச்சிகே அசோக கருணாரத்ன, 08 வாக்குகளையும் அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த பெருமாள் சுரேந்திரன் 08 வாக்குகளைப் பெற்று மேற்படி சபையின் பிரதி தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட அழகமுத்து நந்தகுமார் 07 வாக்குகளையும், அதே கட்சியைச் சேர்ந்த பிரதி தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட செல்லையா யோகேஸ்வரம் 07 வாக்குகளையும் பெற்றனர்.
1. ஹட்டன் டிக்கோயா மாநகர சபை (15 இடங்கள்)
• தேசிய மக்கள் கட்சி – 06
• ஐக்கிய மக்கள் சக்தி – 05
• இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 02
• சுயேச்சை (01) – 01
• ஐக்கிய தேசியக் கட்சி – 01