ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் அன்னமாளின் திருச்சுரூப பவனி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

0
240

ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் அன்னமாளின் திருச்சுரூப பவனி இன்று மிக சிறப்பாக நடைபெற்றது.
வீதியில் நின்ற கிருஸ்த்தவ பக்தர்கள் அன்னமாளின் திருச்சொருபத்திற்கு மாலை அணிவித்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸ் அவர்களின் தலைமையில் இன்று விசேட தேவ ஆரதனையினை தொடர்ந்து அன்னமாளின் தேர் பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

நுவரெலியா மாவட்டத்தின் மிக பிரசித்தி பெற்ற கிருஸ்த்தவ ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து விசேட வழிபாடுகள் தேவ ஆராதனைகள் இடம்பெற்று இன்று தேர் பவனி இடம்பெற்றது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட குறித்த தேர் பவனியில் பேண்ட வாத்தியங்கள் இசை முழங்க பக்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here