ஹட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான (ஐஓசி) எண்ணை நிரப்பு நிலையத்திற்கு இன்று 11 காலை பெற்றோல் பெற்றுக்கொடுக்கப்பட்டதனை தொடர்ந்து வரிசையில் நின்றவர்களுக்கு ஹட்டன் பொலிஸார் டோக்கன்களை பெற்றுக்கொடுத்து பெற்றோல் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இன்று (11) திகதி பெற்றோல் ஹட்டனுக்கு வருகிறது என கேள்வியுள்ள வாகன உரிமையாளர்கள் இன்று காலை முதல் வரிசையில் நின்றனர்.இவ்வாறு வரிசையில் நின்றவர்களுக்கு ஹட்டன் பொலிஸார் டோக்கன்களை பெற்றுக்கொடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பெற்றோல் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இதே நேரம் கடந்த 08ம் திகதி ஹட்டன் பெற்றோல் நிலையத்தில் மின்பிறப்பாக்கிகளுக்கும் வாகனங்களின் கொள்கலன்களுக்கும் பெற்றோல் பெற்றுக்கொடுக்கப்பட்டமையில் வரிசையில் நின்ற பல வாகனங்களுக்கு பெற்றோல் பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக பலர் தெரிவித்தனர்.
இதனால் இன்றைய தினம் கொள்கலன்களுக்கோ,அல்லது மின்பிறப்பாக்கிகளுக்கோ பெற்றோல் பெற்றுக்கொடுக்கப்பட மாட்டாது என பொலிஸார் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தனர். குறித்த பெற்றோலினை முறையாக வழங்குவதற்காக இரானுவமும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்




