ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அப்பாதை ஊடான அப்பாதையூடான பொது போக்குரவத்து 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டுள்ளன.
ஹட்டன் போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் இன்று (02) அதிகாலை ஒரு மணியளவில் அல்பியன் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
டயகம கிழக்கு தோட்டத்தில் இருந்து 8.டொன் தேயிலை ஏற்றி கொழும்பு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
டயகம பகுதியிலிருந்து அட்டனுக்கு செல்லும் வாகனம் அட்டனில் இருந்து டயகம பிரதேசத்திற்கு செல்லும் வாகனங்களின் போக்குவரத்து சேவை தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தொழிலுக்கு செய்பவர்கள் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து சிரமங்களை எதிர் நோக்கினர்.
இதேவேளை இன்னும் குறித்த லொறியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்கையில் தொடர்ந்து இப்பிரதேசத்தில் மழை பெய்து வருவதால் இப்பாதை ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு தொடர்ந்து பாதையில் விபத்துகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு என். சி. தோட்ட பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதன்போது பலத்த காயங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
01.10.2020 அன்று காலை 6.30 மணியளவில் டயகம நகரத்தில் இருந்து போடைஸ் வழியாக அட்டன் சென்ற தனியார் பஸ் போடைஸ் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 47 பேர் பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செய்பவர்கள் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் அப்போது வீடு திரும்பினர்.
அதன்பின் இப்பகுதி மக்கள் இப்பாதையை புனரமைத்து தருமாறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.இதன் விளைவாக
மத்திய மாகாண வீதி அதிகார சபை ஊடாக அப்போது ராஜாங்க அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் தலைமையில் பாதை புனரமைப்பதற்கான அடிகள் 2020ஆம் ஆண்டு நாட்டப்பட்டது .அதனை தொடர்ந்து பாதை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது.
கடந்த ஆறு மாத காலமாக அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டது. தற்போது இப்பாதை ஆபத்தான நிலையை எதிர் நோக்கியுள்ளது.
பாதையில் பாரிய அளவிலான குழிகள் காணப்படுவதால் மழைநீர் குழிகளில் நிறைந்திருப்பதால் பாதை எது குழி எது என்று தெரியாத அளவிற்கு பாதை காணப்படுகிறது.
இதனால் வாகன சாரதிகள் பொதுமக்கள் அச்சத்துடன் இப்பாதையில் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. இன்றைய தினம் விபத்துக்கான காரணம் இப்பாதையை புனரமைக்கப்படாமையே எனவே பாதையில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் .
அத்தோடு தொடர்ந்து இப்பிரதேசத்தில் அதிகமான விகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்