ஹட்டன் வலய தமிழ் பாடசாலைகளுக்கு 25 ஆம் திகதி விசேட விடுமுறை!

0
236

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு,ஆலய நிர்வாகம் மற்றும் பல தரப்பினராலும் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இந்த விடுமுறை தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விடுமுறைக்கான கல்வி நடவடிக்கைகளை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி சனிக்கிழமை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலைய தமிழ் கல்வி பணிப்பாளர் ஆர்.விஜயேந்திரன்
தெரிவித்தார்.

 

ஆ.ரமேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here