இந்தியா அரசினால் நிவாரணமாக வழங்கப்பட்ட பால்மாவை பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டில் போக்குவரத்து செலவுக்கென பிரதேச சபை சேர்ந்த சிலரால் 50 ரூபா பொதுமக்களிடம் அறவிடப்படுவதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து இது தொடர்பில் பதுளை மாவட்ட செயலாளர், அப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் விசாரணை மேற்கொள்ளமாறு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்ததை தொடர்ந்து பிரதேச செயலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணையின் பிரகாரம் 50 ரூபாய் வீதம் 25 பேரிடம் வசூலித்த பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச செயலரால்,செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.