ஹிஷாலினியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

0
192

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுடன் உயிரிழந்த ஜூட்குமார் ஹிஷாலினியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய சிறுமியின் உடல் இன்று (27) தோண்டியெடுக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது

சிறுமியின் பூதவுடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்த அனுமதி வழங்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (26) அனுமதி வழங்கினார்.

சிறுமியின் சடலத்தை தோண்டி, மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்துவதற்காக விசேட சட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்குமாறு மேலதிக நீதவான், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன், டி,சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here