ஹெரோயின் போதைப்பொருளுடன் பாணந்துறையில் ஒருவர் கைது

0
20
60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here