ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது

0
177

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 2 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்து, நேற்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி வீதியில் வைத்து சந்தேக நபர்கள் இருவரும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகினர்.

இவ்வாறு கைதான நபர்கள் சாய்ந்தமருது கல்முனை பகுதியை சேரந்த 19 மற்றும் 56 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன், சந்தேக நபர்கள் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 9 கிராம் 580 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443), அபேரட்ன (75812), பொலிஸ் கன்டபிள்களான நிமேஸ்(90699), திலகரட்ண (90740), சாரதி குணபால (19401)அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் சாய்ந்தமருது பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here