பாடசாலைக்கு அண்மை காலமாக இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.அந்தவரிசையில் இன்றைய தினமும் இசைக்கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஹெல்பொட நோர்த் பாடசாலையில் அதனோடு கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் பல்வேறு அழகிய சித்திரங்கள்,ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அக்கண்காட்சியோடு ஆசைக்கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைய முன்னால் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வரனின் நிதியொதிக்கீட்டில் இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட ஹெல்பொட வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் செல்வமதன், கொத்மலை வலய கல்விப்பணிப்பாளர் இராஜேந்திரன் போன்றோர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்