தசவதாரத்தில் பத்து வேடங்களில் பத்து குரல்களில் கோலிவுட், ஹொலிவுட் என அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். உலகநாயகன் கமல்ஹாசன் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி இன்றுடன் 64ஆவது ஆண்டில் வெற்றியுடன் அடியெடுத்து வைக்கிறார்.
1960ம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’வில் கமல்ஹாசனின் சினிமா பயணம் ஆரம்பமாகியது.
6 வயதில் ‘அப்பாவும் நீயே அம்மாவும் நீயே’ என ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட கமல், 68 வயதிலும் ஹொலிவுட்டுக்கே சவால் விடுவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர் இன்று வரை ஒரு ஹொலிவுட் படத்தில் கூட நடித்தது இல்லை. தமிழ் சினிமாவில் புதிய புதிய நுட்பங்களை பயன்படுத்தி ஹொலிவுட்டை மிரள விடும் அளவு தமிழ் சினிமாவில் படைப்புகளை கொடுத்து வருகின்றார்.தசவதாரத்தில் பத்து வேடங்களில் பத்து குரல்களில் கோலிவுட், ஹொலிவுட் என அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.
நடிகர், இயக்குநர், எழுத்தாளர், கதையாசிரியர், வசனகர்த்தா என திரையுலகில் கமல்ஹாசன் தொடாத இடங்களும், நிகழ்த்தாத சாதனைகளும் கிடையாது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசைனைத் தொடர்ந்து தமிழில் இருந்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ஒரு கலைஞனாக கமல்ஹாசன் காணப்படுகிறார்.
ஒரு நடிகனாக கமல் மேற்கொண்ட புதிய முயற்சிகள், தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியது.16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, தேவர் மகன், விருமாண்டி, இந்தியன் , தசாவதாரம், குருதிப்புனல் , தேவர் மகன் , நாயகன் , விக்ரம் என நீண்டு கொண்டே செல்கின்றது. கமலின் படங்களை பட்டியலிடுவது மிகவும் கடினம்.
தெலுங்கில் நடித்த மரோ சரித்ரா, சுவாதி முத்யம் இந்தியில் நடித்த’ஏக் துஜே கேலியே, சத்மா, சாகர் போன்ற படங்களின் வெற்றி மற்ற மொழி ரசிகர்களிடமும் அவரை பிரபலப்படுத்தின.
தற்போது மீண்டும் கல்கி படத்தில் தொலுங்கு ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.4 முறை தேசிய விருதுகள், உயரிய பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை தமிழ் சினிமாவில் குவித்து வைத்திருக்கின்றார்.
தமிழ் சினிமா சற்று சரிந்து கிடந்த போது வெளியான ‘விக்ரம்-2’ படம் கமல்ஹாசனின் புகழை மேலும் பறைசாற்றியது. ‘மெகா ஹிட்’ ஆன இந்தப்படத்தால் புதிய தலைமுறை ரசிகர்களும் அவர் பக்கம் திரும்பினர்கள்.
‘விக்ரம் 2’ கொடுத்த வெற்றியால் 27 வரும் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உயிர் பெற்றிருக்கின்றது.
அதனை முடித்த கையுடன் மணிரத்னம், எச் வினோத், கௌதம் மேனன் என்று அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்ப உலக தரத்தில் தனது ரசிகர்களுக்கு திரைப்படங்களை கொடுத்து வரும் கமல்ஹாசன், சினிமாவில் தனது 64ஆவது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறார்.அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை கொண்டாடும் விதமாக கமல் ரசிகர்கள் #64YearsOfKamalism என ஏராளமான ஹேஷ்டேக்குகளை வைலராக்கி வருகின்றனர்.