முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவம் இதுவரையில் 21பேர் பலி!

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன நெஷனல் வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!!

தமிழர் நினைவு நாள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா – வீடுகளை சுத்தம் செய்ய 10,000 ரூபா வழங்க நடவடிக்கை!!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மரணமடைந்த நபர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

பொலிஸாரின் வார்த்தையை மீறி சென்றவர்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை- மாதம்பையில் சம்பவம்!!

சிலாபம் கொழும்பு வீதியில் மாதம்பை பகுதியில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்த போது அந்த பகுதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை செல்லவேண்டாமென பொலிஸார் அறிவித்த போதும் அதனை பொருட்படுத்தாது சென்ற நபர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 12.5வீத பஸ் கட்டணம் அதிகரிப்பு- முழுவிபரம் உள்ளே!!

இன்று நள்ளிரவு முதல் 12.5வீதம் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பான விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. பழைய கட்டணங்களையும் புதிய கட்டணங்களையும் கிழே பார்க்கலாம்.        

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை- வாகன சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது.

பொதுமக்களுக்கு வளிமண்டல திணைக்களத்தினால் ஓர் அவசர எச்சரிக்கை!!

நாட்டை அண்டிய வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

புதியபேரூந்து கட்டணங்களின் முழுவிபரம் இதோ!!

நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள், நேற்று(16) முதல் அமுலுக்கு வருவதாக, போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமான 10 ரூபாயில், எந்தவொரு மாற்றமும் எற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  
error: Content is protected !!