மின்சார சபை பணியாளர்கள் இன்று 12 மணி முதல் பணிப்புறக்கணிப்பு!

0
100

இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததைக் கண்டித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே இருகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவடைந்தது.

இதனையடுத்து கடந்தி 16 ஆம் திகதி மின்சார சபையின் தலைவருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பும் தோல்வியில் முடிவடைந்தது.

இந்தநிலையில், தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது அசமந்த போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகளுக்கு எதிராகவே பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here